பள்ளிகளில் நித்தமும் இருக்கணும் சுத்தம்! - வட்டார கல்வி அலுவலர் - Daily Dhuniya

Breaking

Sunday, October 3, 2021

பள்ளிகளில் நித்தமும் இருக்கணும் சுத்தம்! - வட்டார கல்வி அலுவலர்

நவ., 1 முதல், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவதால், பள்ளி வளாகங்களை துாய்மையாக வைத்திருக்க வேண்டும், என, பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலகத்தில், நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டம் நடந்தது.

பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

நவ., 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர், கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஆசிரியர்களும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இது தொடர்பான ஆவணங்களை, ஆசிரியர்கள், எமிஸ் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பள்ளி வளாகத்தை, இப்போதிருந்தே துாய்மையாக வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். மைதானத்தில் உள்ள குப்பையை அகற்றி, தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும், இருபது மாணவ, மாணவியர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மாணவர்கள் அதிக எண்ணிக்கையில், இடப்பற்றாக்குறையோடு இருப்பது தெரியவந்தால், அவர்களை சுழற்சி முறை அடிப்படையில், பள்ளிக்கு வர அறிவுரை வழங்க வேண்டும்.

இதுகுறித்து, பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளிக்கு தினமும் வரும் மாணவ, மாணவியரின் உடல் வெப்பத்தை, வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்து, அதை அதற்கான பதிவேடுகளில் பதிவு செய்தல் வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment