மகள் கண் முன்னே மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம் - Teacher stabs wife to death in front of daughter - shocking incident
9 வயது மகள் கண் முன்னே மனைவியை ஆசிரியர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
புதுடெல்லியின் நவாடா பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நபருக்கு மனைவியும் 9 வயதில் மகளும் உள்ளனர். இதனிடையே, ஆசிரியருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இதனால், அவ்வப்போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஆசிரியருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று மாலை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஆசிரியர் தனது மகள் கண் முன்னே மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான பெண் உயிரிழந்துவிட்டார். மகள் கண் முன்னே மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஆசிரியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment