ஆப்பிளை கடித்துவிட்டதால் 6வயது மாணவன் அடித்துக்கொலை - தனியார் பள்ளியில் நடந்த கொடூரம் - 6-year-old boy beaten to death after biting apple - Atrocity in private school - Daily Dhuniya

Breaking

Saturday, October 1, 2022

ஆப்பிளை கடித்துவிட்டதால் 6வயது மாணவன் அடித்துக்கொலை - தனியார் பள்ளியில் நடந்த கொடூரம் - 6-year-old boy beaten to death after biting apple - Atrocity in private school

ஆப்பிளை கடித்துவிட்டதால் 6வயது மாணவன் அடித்துக்கொலை - தனியார் பள்ளியில் நடந்த கொடூரம் - 6-year-old boy beaten to death after biting apple - Atrocity in private school

தனியார் பள்ளியில் நடந்த துர்கா பூஜையில் வைக்கப்பட்டிருந்த பழங்களில் ஆப்பிளை எடுத்து ஆறு வயது மாணவன் சாப்பிட்டு விட்டதால் ஆத்திரமடைந்த பள்ளி உரிமையாளர்கள் அந்த சிறுவனை அறைக்குள் அழைத்துச் சென்று அடித்து உதைத்து பள்ளி வளாகத்திற்கு வெளியே தூக்கி போட்டு இருக்கிறார்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான். பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது இந்த கொடூரம்.

பீகார் மாநிலத்தில் கயாவில் இருக்கும் பாக்கி பிகா கிராமத்தில் இயங்கி வருகிறது அந்த தனியார் பள்ளி. இந்த பள்ளியில் ஆறு வயது சிறுவன் விவேக் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி வளாகத்தில் துர்கா பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. அப்போது ஒரு தட்டில் பழங்கள் வைக்கப்பட்டிருந்துள்ளன. சிறுவன் விவேக் அதில் ஆப்பிளை எடுத்து கடித்திருக்கிறான் . இதை பார்த்து ஆத்திரமடைந்த பள்ளி ஆசிரியர் விவேக் சிங், அவரது மனைவி இரண்டு பேரும் சேர்ந்து சிறுவன் விவேக்கை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று பூஜைக்காக வைத்திருந்த பழத்தை ஏன் சாப்பிட்டாய் என்று ஆத்திரத்துடன் கேட்டு கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள். நெஞ்சில் எட்டி உதைத்து இருக்கிறார்கள். இதில் படுகாயம் அடைந்து கிடந்த மயங்கி கிடந்த மாணவனை பள்ளி வளாகத்திற்கு வெளியே வீசி இருக்கிறார்கள்.

இதை பார்த்து ஆட்டோ டிரைவர் அந்த சிறுவனை பெற்றோரிடம் எடுத்துச் சென்ற ஒப்படைத்து இருக்கிறார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான். வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தன்னை இரண்டு பேரும் மார்பிலேயே உதைத்தார்கள் என்று அந்த சிறுவன் சொன்னதைக் கேட்டு சிறுவனின் பெற்றோரும் தாத்தாவும் கதறி அழுதுள்ளார்கள்.

சம்பவம் குறித்து அறிந்த கயா போலீசார், பள்ளியை நடத்தி வந்த தம்பதியை கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment