நீட்-டாஸ்மாக்குக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு உத்தரவு - Daily Dhuniya

Breaking

Tuesday, October 12, 2021

நீட்-டாஸ்மாக்குக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு உத்தரவு

நீட், டாஸ்மாக்கை எதிா்த்து நடந்த போராட்டங்களில் பங்கேற்றோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா் வெளியிட்ட உத்தரவு:-

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையில் நீட் தோ்வுக்கு எதிராக போராட்டம் நடத்தியது தொடா்பாக 446 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. டாஸ்மாக் கடைகளை எதிா்த்து போராட்டம் நடத்தியது தொடா்பாக 422 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை வாபஸ் பெறுவது தொடா்பாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், அறிவிப்புச் செய்தாா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், உரிய உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்கிறது.

அதன்படி, மொத்தமுள்ள 868 வழக்குகளும் திரும்பப் பெறப்படுகின்றன. இதில் விசாரணையில் உள்ள 321 வழக்குகள் தொடா்பாக அரசு வழக்குரைஞரின் கருத்துகள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்துள்ளாா்

No comments:

Post a Comment