அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வாக்கினை அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் பதிவு செய்திடும் பொருட்டு - மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பத்திரிக்கை செய்தி - Daily Dhuniya

Breaking

Saturday, October 2, 2021

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வாக்கினை அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் பதிவு செய்திடும் பொருட்டு - மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பத்திரிக்கை செய்தி

பத்திரிக்கை செய்தி

திருப்பத்தூர் மாவட்டம், ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள்-2021, 6 ஊராட்சி ஒன்றியங்களில் 1779 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள். 208 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், 125 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு 1164 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வாக்கினை அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் பதிவு செய்திடும் பொருட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் படிவம்-15னை பூர்த்தி செய்து. தேர்தல் பயிற்சி வகுப்புகளில் வழங்கப்பட்டுள்ளதை ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது அஞ்சல் வாக்குச்சீட்டினை 04.10.2021 தேதியில் பிற்பகல் 3.00 மணிக்குள் தங்களது பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் பெற்றுக்கொள்ளுமாறும், ஊராட்சி ஒன்றியங்களில் மூடி முத்திரையிட்டு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்திடுமாறும், அஞ்சல் வாக்குச் சீட்டுகளை தபால் மூலமாகவும், தனிநபர் மூலமாகவும் 12.10.2021 தேதியன்று வாக்குகள் எண்ணும் மையத்தில் காலை 8.00 மணிக்குள் செலுத்திடலாம் என்கிற தகவல் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்து கொள்ளப்படுகிறது.

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர். திருப்பத்தூர் மாவட்டம்.

No comments:

Post a Comment