1 முதல் 8ம் வகுப்பு வைர பள்ளி திறப்பு எப்போது - Daily Dhuniya

Breaking

Saturday, October 23, 2021

1 முதல் 8ம் வகுப்பு வைர பள்ளி திறப்பு எப்போது

புதுச்சேரி : புதுச்சேரியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் துவங்குவது தொடர்பாக, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கவர்னர் தமிழிசையை சந்தித்து ஆலோசனை நடத்தினார். புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்பு, கடந்த செப்., 1ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் நடந்து வருகிறது.தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நவ., 1ம் தேதி துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.புதுச்சேரியில் தனி கல்வி வாரியம் கிடையாது. தமிழக கல்வி வாரியத்தை பின்பற்றியே பாடங்கள் நடத்தப்படுகிறது.

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு எப்போது கவர்னருடன் கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை

புதுச்சேரி : புதுச்சேரியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் துவங்குவது தொடர்பாக, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கவர்னர் தமிழிசையை சந்தித்து ஆலோசனை நடத்தினார். புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்பு, கடந்த செப்., 1ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் நடந்து வருகிறது.தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நவ., 1ம் தேதி துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.புதுச்சேரியில் தனி கல்வி வாரியம் கிடையாது. தமிழக கல்வி வாரியத்தை பின்பற்றியே பாடங்கள் நடத்தப்படுகிறது.

எனவே, தமிழகத்தை பின்பற்றியே புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு இருக்கும் என கவர்னர் தமிழிசை அறிவித்து இருந்தார்.இந்நிலையில், பள்ளி திறப்பது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி தலைமையில் சட்டசபையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், சுகாதாரத் துறை செயலர் அருண், பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு கலந்து கொண்டனர்.அப்போது, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையி லான வகுப்புகளை நவம்பர் மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகை வருவதால், பள்ளி திறக்கும் தேதி இறுதி செய்யப்படவில்லை.பள்ளி திறப்பதற்கான அனுமதி கோரும் கோப்பு, கவர்னர் தமிழிசைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், நேற்று கவர்னர் தமிழிசையை சந்தித்து, பள்ளி திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். ஓரிரு நாட்களில் பள்ளி திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment