கலை, அறிவியல் படிப்புக்கு விண்ணப்பித்த 4,170 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு - Daily Dhuniya

Breaking

Saturday, October 23, 2021

கலை, அறிவியல் படிப்புக்கு விண்ணப்பித்த 4,170 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு

புதுச்சேரி : கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த 4,170 மாணவர்களுக்கு முதற்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி சென்டாக் இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.சென்டாக் நீட் மதிப்பெண் அல்லாத படிப்பு களுக்கு 10,684 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான மெரிட் லிஸ்ட் கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்டு, ஆட்சேபனைகள் தொடர்ந்து வரவேற்கப்பட்டன.இந்நிலையில் அனைத்து பரிசீலனைகளும் முடிந்து நீட் அல்லாத படிப்புகளில், விண்ணப்பித்த மாணவர்களுக்கான இறுதி கட்ட மெரிட் லிஸ்ட் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது.இந்நிலையில் நீட் அல்லாத படிப்புகளில், கலை, அறிவியல் படிப்பு களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு முதற்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி, சென்டாக் இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.இடம் கிடைத்த மாணவர்களின் பட்டியல் www.centacpuducherry.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.முதற்கட்ட கலை அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் மொத்தமுள்ள 4,260 சீட்டுகளில் 4,170 இடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இடம் கிடைத்த மாணவர்கள் வரும் 25ம் தேதியில் இருந்து தங்களுடைய சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இடம் கிடைத்த கல்லுாரியில் மாணவர்கள் வரும் 26ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதிக்குள் ஒரிஜனல் சான்றிதழ்களுடன் சேர வேண்டும்.இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment