TNPSC தமிழ் மொழித்தேர்வு – மதிப்பெண், பாடத்திட்டம் மாற்றம் - மசோதா தாக்கல் - Daily Dhuniya

Breaking

Thursday, September 9, 2021

TNPSC தமிழ் மொழித்தேர்வு – மதிப்பெண், பாடத்திட்டம் மாற்றம் - மசோதா தாக்கல்

டி.என்.பி.எஸ்.சி. தமிழ் மொழி தேர்வின் குறைந்த பட்சம் தேர்ச்சி மதிப்பெண் மற்றும் பாட திட்ட மாற்றம் தொடர்பாக சட்ட திருத்தம் செய்ய, சட்டசபையில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். இந்த தேர்வுகள் ஒவ்வொரு துறைக்கும் ஏற்ப நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கபடுகிறது. இந்த நிலையில் தொடக்க கல்வி முதல் அனைத்தையும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும்படி சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

முழுக்க தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் போட்டித் தேர்வுகளையும் தமிழில் எழுதுபவர்களுக்கு மட்டுமே தமிழ் வழிக்கல்விக்கான 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். பத்தாம் வகுப்பு பொது தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, அடிப்படை தமிழ் மொழி திறனை சோதிக்க இரண்டாம் நிலை மொழி தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.

இந்த முறையில் கடந்த 216 ம் ஆண்டு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையால் மாற்றம் செய்யப்பட்டு இந்த மொழி தேர்வில் குறைந்த பட்சம், 45 மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது டி.என்.பி.எஸ்.சி. தமிழ் மொழி தேர்வின் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் மற்றும் பாட திட்டங்களை மாற்றம் செய்வது தொடர்பாக சட்ட திருத்த மசோதாவை நிதி அமைச்சர் சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார்.

No comments:

Post a Comment