தெலுங்கானாவில் TSAT கல்வி சேனல்கள் நிறுத்தம் - அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பாதிப்பு - Daily Dhuniya

Breaking

Thursday, September 9, 2021

தெலுங்கானாவில் TSAT கல்வி சேனல்கள் நிறுத்தம் - அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பாதிப்பு

தெலுங்கானாவில் செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து தூர்தர்ஷன் யாதகிரி மற்றும் TSAT சேனல்களில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ஆன்லைன் பாடங்கள் :

இந்தியாவில் கடந்த வருடம் முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகள் ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டா கனியாக உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் உணவுக்கே சிரமப்படும் நிலையில் அதிக பணத்திற்கு ஸ்மார்ட் போன்கள் வாங்குவது இயலாத ஒன்றாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் தொலைக்காட்சிகள் வாயிலாக பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தெலுங்கானாவில் தூர்தர்ஷன் யாதகிரி மற்றும் TSAT சேனல்கள் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா குறைந்ததையடுத்து கடந்த மாதம் 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா முழுமையாக குறையாத காரணத்தால் அனைத்து மாணவர்களும் பள்ளி வரவேண்டியது கட்டாயமில்லை என்று அரசு தெரிவித்தது. பள்ளிகளில் மாணவர்களின் வருகை 35 சதவீதமாக உள்ளது என்றும் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து தூர்தர்ஷன் யாதகிரி மற்றும் TSAT சேனல்களில் பாடம் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக டிஜிட்டல் வகுப்புகள் மூலம் பயன்பெற முடியாத சூழல் நிலவுகிறது என்று மாணவர்களும் பெற்றோர்களும் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை கூறுகையில் அனைத்து மாணவர்களும் படிப்படியாக பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment