தமிழகத்தில் உள்ள முதல்வகுப்பு பள்ளி மாணவர் முதல் பல்வேறு இளங்கலை பாடப்பிரிவுகளில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் அரசு கல்விஉதவித்தொகை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை:
தமிழக அரசு குழந்தைகள் கல்வி பயில்வதற்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் செய்து வருகிறது. குழந்தைகளின் கல்வி அறிவு நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் என்பது அரசின் கருத்தாகும். இதனால் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு கற்பித்தல் பணி சிறப்பாக செய்யப்படுகிறது. எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கற்க மேலும் உதவும் விதமாக உதவித்தொகை திட்டங்களும் உள்ளது. தற்போது, 2021 – 2022ம் கல்வியாண்டிற்கான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி அவர்கள் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை வேண்டி தமிழக அரசுக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி தகுதிக்கேற்ப உதவித்தொகை வழங்கப்படும். சென்னை மாவட்டத்தை சேர்ந்த 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மற்றும், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, மருத்துவக்கல்வி, பி.இ, பிடெக். போன்ற பாடங்கள் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூபாய் 1000 முதல் ரூபாய் 7000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.
9ம் வகுப்புக்கு மேல் படிக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படும். ஒன்பதாம் வகுப்புக்கு மேல் பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வி பயில்பவர்களுக்கு ரூபாய் 7000 முதல் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள், http://www.chennai.nic.in/ அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் 15.11.2021க்கு முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அறிவித்துள்ளார்.
முகவரி:
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,
டி.எம்.எஸ்.வளாகம்,
தேனாம்பேட்டை,
சென்னை – 600006.

No comments:
Post a Comment