கருத்தரங்குகள் கூடாது; கல்லுாரிகளுக்கு தடை - கல்லுாரி கல்வி இயக்குனரகம் - Daily Dhuniya

Breaking

Friday, September 3, 2021

கருத்தரங்குகள் கூடாது; கல்லுாரிகளுக்கு தடை - கல்லுாரி கல்வி இயக்குனரகம்

'அரசின் முன் அனுமதி பெறாமல், கல்லுாரிகளில் கலாசார மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது' என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. இயக்குனரகத்தில் இருந்து கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லுாரிகளில், எந்த விதமான கூட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது என, வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வெளிநபர்கள் கூடும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை. மேலும், முக்கியமான நிகழ்ச்சிகளாக இருந்தால் அதற்கு கல்லுாரி கல்வி இயக்குனரகத்தில் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல், கலை, கலாசார மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment