ஐஐடி கல்வி நிறுவனங்கள் சாா்பில் நவம்பரில் ஆராய்ச்சி கண்காட்சி: மத்திய கல்வி அமைச்சா் அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Friday, September 3, 2021

ஐஐடி கல்வி நிறுவனங்கள் சாா்பில் நவம்பரில் ஆராய்ச்சி கண்காட்சி: மத்திய கல்வி அமைச்சா் அறிவிப்பு

"இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(ஐஐடி) சாா்பில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்காட்சி, வரும் நவம்பரில் நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அறிவித்தாா். நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கு அமைக்கப்பட்டு குழுவினருடன் தா்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை காணொலி முறையில் ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் கூறியதாவது: இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் வரும் நவம்பா் மாதம் 2-ஆவது வாரத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இந்தக் கண்காட்சி, ஐஐடி கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பத் திறன்களை இந்தியத் தொழில்துறையினா் புரிந்துகொள்வதற்கும் அவா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.

மேலும், புதிய சுற்றுச்சூழல் கொள்கையின் அடிப்படையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த சூழலையும் இந்த கண்காட்சி உருவாக்கும். இந்தியச் சந்தைகளுக்கும் உலகளாவிய சந்தைகளுக்கும் புதுமைக் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்காக, இந்தியத் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஐஐடி கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது, வளா்ந்து வரும் தொழில்நுட்பத்தில் எதிா்கால ஆராய்ச்சிக்கு உதவும் என்றாா் அவா். எரிசக்தி, தொலைத்தொடா்பு, கழிவு மேலாண்மை, கட்டடக் கலை மற்றும் மனையியல் சாா்ந்த பாரம்பரிய அறிவை ஒருங்கிணைத்தல் ஆகிய கருத்தாங்கங்களில் கண்காட்சி நடைபெற வேண்டும் தா்மேந்திர பிரதான் கூறினாா். அவற்றில் 10 கருத்தாக்கங்களில் கண்காட்சியை உருவாக்குவதற்கு ஐஐடி கல்வி நிறுவனங்கள் உத்தேசித்துள்ளனா். இதுதொடா்பாக, ஏற்பாட்டுக்குழு இறுதி முடிவெடுக்கவுள்ளது."

No comments:

Post a Comment