கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - ஐட்ரீம் மூர்த்தி:
ராயபுரம் தொகுதி, சோமு செட்டித் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சொந்தமான இடத்தில், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வருமா?
அமைச்சர் கணேசன்:
சென்னை சாந்தோமில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கிண்டியில் செயல்படும் தொழில் மற்றும் செயல்முறை அலுவலகத்தில், போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இணையம் வழியாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.ராயபுரத்தில் காலியாக உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும்.
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment