உதவித்தொகை:
தமிழகத்தில் மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஊனமுற்றவர்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் என அனைவருக்கும் கல்வி வழங்கும் நோக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு, அரசு உதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைக்கு எந்தவித நிபந்தனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு நிபந்தனையுடன் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளை தேர்ந்தெடுத்துள்ள மாணவ, மாணவிகளின் பெற்றோர் ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பது அவசியம். தகுதியுடைய மற்றும் ஆர்வமுள்ள மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தினை கல்வி நிறுவனங்களிலேயே பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. புதுப்பித்தல் செய்வோர் செப்.,30க்குள்ளும், புதிய விண்ணப்பங்கள் நவ.,5க்குள்ளும் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு www.tn.gov.in/bcmbcdept என்ற இணையத்தை பார்வையிடலாம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment