முதுகலை ஆசிரியர்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் சரியாக நடத்தாமல் கல்வி கட்டணம் மட்டும் வாங்குவதால், பலர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் படி, தமிழகத்தில் உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 2019-202 ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தேவை ஏற்படுவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 400 கூடுதல் பணியிடங்கள் தேவையுள்ள பணிகளுக்கு அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.
புதிதாக மேற்படி பள்ளிக்கு அனுமதிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களை சார்ந்த அளவுகோல் பதிவேட்டில் பதிவுகளை மேற்கொண்டு பராமரிக்குமாறு சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment