தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வரும் புதிய மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் கட்டணம்:
தமிழகத்தில் தற்போது துவங்கியுள்ளதான 2020-22 ஆம் கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக பள்ளிகள் அனைத்தும் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பின்னாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கைக்காக அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூரை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள மனுவில், ‘தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதாவது கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின் படி, மாணவர் சேர்க்கை பணிகளுக்காக ரூ.50 மட்டுமே வசூலிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்த நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன் என்பவர் கூடுதலாக ரூ.100 பணத்தை வசூலித்து வருகிறார்.
இந்த கூடுதல் கட்டணம் வசூலிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் கட்டணம் தொடர்பான இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் தலைமை ஆசிரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமார், கூடுதல் கட்டண வசூல் குறித்து கேள்வி எழுப்புகையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்தார். இதை தொடர்ந்து பேசிய நீதிபதி பள்ளிகளில் வசூலிக்கப்படும் கூடுத கட்டண விவரம் தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

No comments:
Post a Comment