அப்போது வீட்டின் கதவு மூடி இருந்தது. ராஜலட்சுமி கதவை நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, ஒரே மின் விசிறியில் தாயும், மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்த கவரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு உடலையும் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். கீதாஞ்சலியின் கையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், மகளுடன் போதிய வருமானம் இன்றி தவித்து வருகிறேன். மகள் ஐஏஎஸ் தேர்வுக்காக படித்து வரும் நிலையில் அதற்காக பக்கத்து வீட்டின் அருகே டீ கடை நடத்தி வரும் பொன்னேரி பார்வதியிடம் கடனாக பணம் பெற்றேன்.
எனது, மாமனார் எனக்கு எந்த உதவியும் செய்யாததால் மன உளைச்சலுக்கு ஆளானேன். அத்தோடு சிறிதளவு நிலங்கள் உள்ளன, அந்த நிலத்தை விற்று மேற்கண்ட நபர்களுக்கு கடனை ராஜீ (எ) ராஜலட்சுமி கொடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கீதாஞ்சலி ஐந்து மாதம் வாடகை பாக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment