தமிழக ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்?- முதல்வர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை! - Daily Dhuniya

Breaking

Thursday, July 29, 2021

தமிழக ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்?- முதல்வர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவ தொடங்கியது. ஏப்ரல், மே மாதங்களில் தொற்றின் பாதிப்பு தீவிர நிலையை அடைந்தது. இதனால் தமிழக அரசு முன்னேற்பாடு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலத்தில் முதலில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்தது. ஊரடங்கு காலங்களில் தீவிர கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது, தொழில்கள் முடங்கியது, மற்றும் அனைத்து துறை நிறுவனங்களும் மூடப்பட்டது. தொடர்ந்து மாநிலத்தில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் விளைவால், ஜூன் மாத ஆரம்பத்தில் இருந்து மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. இதனால் மாநில அரசு முறையான ஆலோசனைகளுடன் பாதிப்பு குறைந்துள்ள பகுதிகளுக்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதுவரை பல கட்டங்களாக தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை 31 ம் தேதி வரை அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை மருத்துவ வல்லுநர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். முன்னதாக ஆகஸ்ட் மாத இறுதியில் முன்றாம் அலை பரவல் தொடங்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகின்றதா அல்லது கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுகிறதா என்று நாளை முதல்வரின் அறிவிப்பில் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment