இரு சக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் வரை மானியம் – விண்ணப்பங்கள் வரவேற்பு! - Daily Dhuniya

Breaking

Tuesday, July 27, 2021

இரு சக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் வரை மானியம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இரு சக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் வரை மானியம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு ரூ.25,000 வரை இரு சக்கர வாகன மானியம் வழங்கப்படவுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாக 28.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இருசக்கர வாகன மானியத் தொகை:

தமிழகத்தில் வக்ஃப் வாரியத்தின் கீழ் இருசக்கர வாகனத்திற்கு மானிய தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் வாகனம் 125CC க்கு மிகாமல் இருக்க வேண்டும். 2020 ஆண்டிலிருந்து தயார் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. வக்ஃப் நிறுவனத்தில் பணிபுரியும் உலமாக்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டோரிலிருந்து 40 வயது உடையோர் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவராக இருத்தல் அவசியம். மேலும் 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அதனை தொடர்ந்து வக்ஃப் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தால், அதில் ஒருவருக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் மானியத் தொகை வழங்கப்படும். கல்வித் தகுதி சான்றிதழ்கள், வாகன ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, இருப்பிடச் சான்று, சாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தினை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெறலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக 28.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார். நாளை மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment