'தேசிய கல்வி கொள்கை - 2020 பற்றிய செயலாக்கத்தில், எதிர்கொள்ளவுள்ள சிரமங்கள் குறித்து, அனைத்து பல்கலைகளின் கருத்து அறியப்படும்,'' என, இந்திய பல்கலைகளின் கூட்டமைப்பு தலைவர், துணை வேந்தர் திருவாசகம் பேசினார்.
சென்னை 'அமெட்' கடல்சார் பல்கலை துணை வேந்தர் திருவாசகம், இந்திய பல்கலைகளின் கூட்டமைப்பிற்கு, 100வது தலைவராக, 1008 பல்கலைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, டில்லியில் பதவி ஏற்றார்.
துணை வேந்தர் திருவாசகத்திற்கு, அமெட் பல்கலை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இணை வேந்தர் ராஜேஷ் ராம்சந்திரன் பேசுகையில், ''நாட்டில் உள்ள 1008 பல்கலை துணை வேந்தர்களில், மூத்த துணை வேந்தராக இருப்பதன் அடிப்படையில், திருவாசகம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.அவர் சிறப்பாக பணியாற்றி, இந்திய உயர் கல்வியின் தரத்தை, உலகளவில் மேம்படுத்துவார்,'' என்றார்.
துணை வேந்தர் திருவாசகம் தன் ஏற்புரையில், ''தேசிய கல்வி கொள்கை - 2020 பற்றிய செயலாக்கத்தில், எதிர்கொள்ளவுள்ள சிரமங்கள் தொடர்பாக, அனைத்து பல்கலைகளின் கருத்துகள் அறியப்படும். ''அதற்கு தேவையான மாறுதல்களை, மத்திய கல்வி அமைச்சகம் செய்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

No comments:
Post a Comment