இதர பிற்படுத்தப்பட்டோா் ஜாதிச் சான்றிதழ்: தமிழக அரசு புதிய அறிவுறுத்தல் - Daily Dhuniya

Breaking

Monday, July 19, 2021

இதர பிற்படுத்தப்பட்டோா் ஜாதிச் சான்றிதழ்: தமிழக அரசு புதிய அறிவுறுத்தல்

"பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) ஜாதிச் சான்றிதழ் வழங்கும் போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை கணக்கில் கொள்ள வேண்டியது இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நலத் துறை செயலாளா் ஆ.காா்த்திக் வெளியிட்ட உத்தரவு:-

இந்திய அரசு பணியிடங்களுக்கான நியமனங்கள் மற்றும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் சோ்க்கையில் 27 சதவீத இடஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்படுகிறது. இதில் வளமான பிரிவினா் நீக்கப்பட்டே இந்த ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. வளமான பிரிவினரை நீக்க சில வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வருமான வரம்பை கணக்கிடும் போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தைச் சோ்க்கக் கூடாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது, பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு ரூ.8 லட்சம் என நிா்ணயம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது.

பெற்றோரின் ஆண்டு வருமானத்தை கணக்கிடும் போது ஊதியம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் இருந்து பெறும் வருமானத்தை கணக்கில் கொள்ள வேண்டியதில்லை. எனவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் ஜாதிச் சான்றிதழை வழங்கும் போது இந்த அம்சத்தை கணக்கில் கொள்ள வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்."

No comments:

Post a Comment