ரயில் டிக்கெட் புக்கிங் செய்வோர் கவனத்திற்கு - வெளியான புதிய தகவல் - Daily Dhuniya

Breaking

Sunday, June 27, 2021

ரயில் டிக்கெட் புக்கிங் செய்வோர் கவனத்திற்கு - வெளியான புதிய தகவல்

ஐசிஆர்சிடிசி இணையத்தில் தேவையில்லாமல் கணக்கு வைத்திருப்பவர்களை நீக்கும் பொருட்டு இனி ரயில்வே டிக்கெட்டுகள் புக் செய்ய பாஸ்போர்ட், ஆதார் மற்றும் பான் கார்டு ஆகியவற்றினை இணைத்திருத்தல் அவசியமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐசிஆர்சிடிசி இணையத்தளம்
இந்திய ரயில்வே துறை நாளுக்கு நாள் மிகவும் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐசிஆர்சிடிசி இணையத்தில் பல சிக்கல்கள் தொடர்ந்து இருந்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் தற்போது வரை பொதுமக்கள் டிக்கெட் புக் செய்வதில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

இதனை தடுக்க தற்போது ஐசிஆர்சிடிசி இணையத்தில் இனி லாக் இன் செய்யும் போது தங்களது ஆதார், பான் அல்லது பாஸ்போர்ட் இதில் ஏதேனும் ஒரு அடையாள எண்ணினை கண்டிப்பாக இணைக்க வேண்டும். அவ்வாறு இணைப்பதன் முலமாக தேவையில்லாமல் கணக்கு வைத்திருப்பவர்கள் வெளியேற்றப்பட்டு விடுவர். இதனால் இணையத்தின் தரம் உயர்த்தப்பட்டு விடும்.

இது குறித்த ஆலோசனையில் ரயில்வே துறை அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களுக்கு கூடிய விரைவில் சிறப்பான மற்றும் வேகமான சேவையினை வழங்க ரயில்வே துறை முடிவு எடுத்துள்ளது. இது மட்டுமின்றி, பயணிகள் தங்களது குறைகளை சுரக்ஷா என்ற செயலியில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ரயில்களில் பயணிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை மக்கள் அதில் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment