செய்தி வெளியீடு
செய்தி வெளியீடு எண். 338
நாள். 27-6-2021
தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள்
மாண்புமிகு முதலமைச்சர் திரு முக. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நாளை ( 28-6-2021) முதல் நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பொதுமக்கள், வணிக அமைப்புகள் ஆகியோரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் கருத்துக்கள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு பின்வரும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.
வகை 2 மாவட்டங்களில், துணிக்கடைகள், நகை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதி இன்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மேற்படி புதிய தளர்வுகளை அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொறுப்புடன் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மாண்புமிகு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9

No comments:
Post a Comment