தற்போது செய்திகளில் ஒரு குறிப்பிட்ட 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பரவி வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று பத்திரிகை தகவல் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
கள்ள நோட்டு:
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மோடி தலைமையிலான மத்திய அரசு தடை செய்தது. இதனால் நாட்டில் இருக்கும் கருப்பு பணம் மற்றும் ஊழல் ஒழிக்கப்படும் என்று அரசின் சார்பில் கூறப்பட்டது. அதற்கு பதிலாக புதிதாக 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்கு பின்பாக படிப்படியாக 100, 200, 50 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது சில நாட்களுக்கு முன்பாக ஒரு செய்தி சமூகவலைதளங்களில் பரவியது.
அதாவது மத்திய அரசு அறிமுகப்படுத்தி தற்போது புழக்கத்தில் இருக்கும் 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி புகைப்படத்திற்கு அருகில் இருக்கும் பச்சை பட்டை இருந்தால் அது செல்லாத நோட்டு என்றும் கள்ள நோட்டு என்றும் தகவல் பரவியது. பச்சை பட்டை ஆளுநரின் கையெழுத்திற்கு அருகில் இருந்தால் தான் அது செல்லும் என்று கூறப்பட்டது.
இதனை அடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் பத்திரிகை தகவல் அலுவலகம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது இரு விதமான 500 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்று தெரிவித்துள்ளது. வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment