வேளாண் கவுன்சிலிங் எப்போது பல்கலை துணைவேந்தர் விளக்கம் - University Vice-Chancellor explains when agricultural counseling - Daily Dhuniya

Breaking

Saturday, September 24, 2022

வேளாண் கவுன்சிலிங் எப்போது பல்கலை துணைவேந்தர் விளக்கம் - University Vice-Chancellor explains when agricultural counseling

வேளாண் கவுன்சிலிங் எப்போது பல்கலை துணைவேந்தர் விளக்கம் - University Vice-Chancellor explains when agricultural counseling

'மருத்துவ கவுன்சிலிங்கிற்கு பின்னரே, வேளாண் படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பி.எஸ்சி., அக்ரி படிப்பில், 12 பாடபிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில், பல்கலை உறுப்பு கல்லுாரிகளில், 2148 இணைப்பு கல்லுாரிகளில் 2337 என, மொத்தம், 4485 இடங்கள் உள்ளன.

துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:

அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான, 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டு வரையறைகளை அரசு வழங்க வேண்டும். அதை வழங்கிய பின்னரே தரவரிசைப்பட்டியல் வெளியிட முடியும்.

இதுதவிர, மருத்துவ கவுன்சிலிங்கிற்கு முன்னர் தரவரிசை வெளியிடப்பட்டு கவுன்சிலிங் நடத்துவதால், ஒரு சில மாணவர்கள் மருத்துவ இடம் கிடைத்ததும் அங்கு சென்று விடுவர். அந்த இடங்களை நிரப்ப மீண்டும் கவுன்சிலிங் நடத்த வேண்டியிருக்கும்.

இதைக்கருத்தில் கொண்டு மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பின், வேளாண் கவுன்சிலிங்கை நடத்த திட்டமிட்டுள்ளோம். கவுன்சிலிங் துவங்கிய மூன்று வாரத்துக்குள் மாணவர்கள் சேர்க்கை முடிக்கும் அளவுக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment