Teacher Examination Board orders to submit certificates - சான்றிதழ்களை சமர்ப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு
முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்சியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், வரும் 20க்குள் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 2020 - 21ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர், முதல் நிலை உடற்கல்வி இயக்குனர், முதல் நிலை கணினி பயிற்றுனர் நியமனத்துக்கு, 2021 செப்., 9ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த பிப்ரவரியில் கணினி வழித் தேர்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இம்மாதம் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. அதைத் தொடர்ந்து, 13 பாடங்களுக்கு தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.
பட்டியலில் உள்ளவர்களில் சிலர், ஒரு சில சான்றிதழ்களை சமர்ப்பிக்காததால், அவர்களின் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அவர்களில் ஒரு சிலர் தற்போது சமர்ப்பித்துள்ளனர். இன்னும் சிலர், இன்று வரை சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே, தற்காலிக தேர்வு பட்டியலில் இடம்பெற்று, 'வித் ஹெல்டு' அல்லது சான்றிதழ் தேவை எனக் குறிப்பிடப்பட்டுள்ள பணி நாடுனர்கள், வரும் 19, 20ம் தேதிகளில், ஆசிரியர் தேர்வு வாரியத்தில், தங்கள் சான்றிதழ்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment