RTE - Private Schools Request to Pay Tuition Fees of Students Enrolling in Reservation - RTE - இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணம் வழங்க தனியார் பள்ளிகள் கோரிக்கை - Daily Dhuniya

Breaking

Sunday, September 18, 2022

RTE - Private Schools Request to Pay Tuition Fees of Students Enrolling in Reservation - RTE - இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணம் வழங்க தனியார் பள்ளிகள் கோரிக்கை

RTE - இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணம் வழங்க தனியார் பள்ளிகள் கோரிக்கை

'கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில்தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் கல்வி கட்டணங்களை தாமதமின்றி அந்தந்த கல்வியாண்டுக்குள் வழங்க வேண்டும்' என தமிழ்நாடு தனியார் பள்ளி மற்றும் கல்லுாரி சங்க கூட்டமைப்பு கேட்டு கொண்டுள்ளது.

What is RTE quota in Tamilnadu?

Is RTE applicable to CBSE schools in Tamilnadu?

When was RTE implemented in Tamilnadu?

What is the age limit for RTE Tamil Nadu?

தமிழ்நாடு தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகள்சங்க கூட்டமைப்பின் மாநில மாவட்ட நிர்வாகிகள் தாளாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. தலைவர் ராஜா தலைமை வகித்தார். செயலர் இளங்கோவன் பொருளாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் சரஸ்வதி ஈஸ்வரன் நாமக்கல் எம்.பி. சின்ராஜ் பங்கேற்றனர். மாணவி தற்கொலை செய்த கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நேரடி வகுப்புகளை துவங்கவும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் பள்ளி நிர்வாகத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்.

தனியார் பள்ளி பள்ளிகளின் உடமைகளின் பாதுகாப்பு குறித்து உரிய அரசாணை வெளியிட வேண்டும். நகர் ஊரமைப்பு துறை அனுமதி பெறாத பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுக்கும் 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரமும் வழங்க வேண்டும்.மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதி கல்வி நிறுவன கட்டடங்களுக்கு 75 சதவீதம் உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைக்க வேண்டும்.தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழுவில் தாளாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 25 சதவீத (ஆர்.டி.இ.) இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான கட்டணங்களை 50 சதவீதம் உயர்த்தி தாமதமுமின்றி அந்தந்த கல்வி ஆண்டுக்குள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment