கடந்த 31-08-2022 அன்று நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில விரைவு செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இயக்க ரீதியான தீர்மானங்கள்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்டக்கிளை இல்லாத மாவட்டத்தில், புதிய மாவட்ட கிளைகளை தொடங்குவது எனவும், அதற்கான மாவட்ட பொறுப்பாளர்களை நியமிப்பது எனவும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்டக்கிளை செயல்படும் பகுதிகளில், ஒன்றியக்கிளை இல்லாத ஒன்றியங்களில். புதிய கிளைகளை தொடங்க, பொறுப்பாளர்களை நியமிப்பது எனவும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
2021-2022 மற்றும் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான உறுப்பினர் சந்தா. நாட்காட்டி கணக்குகளை உடனடியாக முடித்து வழங்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
2023 நாட்காட்டியை சிறப்பாக தயார் செய்வது எனவும், அதற்கான தேவைப்பட்டியலை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் மாநில செயற்குழு தீர்மானிக்கிறது.
* 2022-2023 உறுப்பினர் சந்தா சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டுமென மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகளை இச்செயற்குழு வேண்டுகிறது.
நீலகிரி மாவட்டம். கூடலூர் வட்டார கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் இந்த ஆண்டிற்கான மாதாந்திர நாள்காட்டியை கிழித்து, அதில் சம்பள பட்டியலுக்கு உறையாக தைத்திருப்பதை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறான இழிச்செயல்களில் ஈடுபட்ட வட்டார கல்வி அலுவலக ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
* நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒன்றியத்தில் பணியாற்றும் இளைய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை, தற்காலிக வட்டார கல்வி அலுவலர்களாக நிதி அதிகாரத்தோடு நியமனம் செய்திருப்பது. முற்றிலும் தவறான முன்னுதாரணம் ஆகும். எனவே அவ்வாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
* நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒன்றியப் பிரச்சனையில் தனிக்கவனம் செலுத்தி உடனடியாக, தொடக்கக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

No comments:
Post a Comment