JEE Main Answer Key: ஜேஇஇ மெயின் தேர்வு Answer Key வெளியீடு; டவுன்லோடு செய்வது எப்படி? - Daily Dhuniya

Breaking

Friday, August 5, 2022

JEE Main Answer Key: ஜேஇஇ மெயின் தேர்வு Answer Key வெளியீடு; டவுன்லோடு செய்வது எப்படி?

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வின் இரண்டாவது அமர்வுக்கான Answer Key-ஐ தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதை டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. ஜே.இ.இ. தேர்வு ஆண்டுதோறும் நான்கு கட்டங்களாகத் தேசியத் தேர்வுகள் முகமையால் தேர்வு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்தத் தேர்வின் முதல் அமர்வு (session 1) ஜூன் 20 முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாவது அமர்வு (session 2) ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் இந்தத் தேர்வுக்கான Answer Key-ஐ தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதை டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேர்வர்கள் https://examinationservices.nic.in/jeemain22/root/DownloadAdmitCard.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFVj34FesvYg1WX45sPjGXBr6zOap+YI3RfHX0uXZk7IA என்ற இணைப்பை க்ளிக் செய்யவேண்டும்.

அதில், விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பதிவிட்டு விடைக் குறிப்பைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டும் Answer Key-ஐ சரிபார்த்துக் கொள்ளலாம்.

ஆட்சேபனை தெரிவிக்கலாம்

ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்பில் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். எனினும் ஒவ்வொரு கேள்விக்கும் ரூ.200 தொகையைச் செலுத்த வேண்டும். இந்தத் தொகை திரும்ப அளிக்கப்படாது என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: 011-40759000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இ- மெயில் முகவரி: jeemain@nta.ac.in

No comments:

Post a Comment