ஆண்டிப்பட்டி அரசு கல்லூரியில் கலந்தாய்வு துவக்கம்.! - Daily Dhuniya

Breaking

Friday, August 5, 2022

ஆண்டிப்பட்டி அரசு கல்லூரியில் கலந்தாய்வு துவக்கம்.!

அரசு கலைக்கல்லூரிகளில் படிக்க மாணவ-மாணவிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, பிளஸ் 2 முடித்துள்ள மாணவ-மாணவிகள் அரசு கலை கல்லூரிகளில் படிக்க ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தாண்டுக்கான மாணவர் சேரக்கை நடைபெறவுள்ளது.

இதற்கான முதல் கட்ட கலந்தாய்வு 5ம் தேதி) துவங்குகிறது. முதல் நாளில் சிறப்பு பிரிவு மற்றும் பி.எஸ்சி கணிதம் பாடத்துக்கான கலந்தாய்வு நடக்கிறது.

இதைத்தொடர்ந்து நாளை (6ம் தேதி) பி.காம். துறைக்கும், 8ம் தேதி பி.ஏ பொருளாதாரம் பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வும் நடக்க உள்ளது.

மேலும், இந்த கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ-மாணவிகள் காலை 9 மணிக்கு கல்லூரிக்கு வர வேண்டும் என்று தகவலலை கல்லூரி முதல்வர் சுஜாதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment