அரசுப் பள்ளிக் கட்டடத்துக்கு இடம் ஒதுக்கக் கோரி மனு - Daily Dhuniya

Breaking

Thursday, August 4, 2022

அரசுப் பள்ளிக் கட்டடத்துக்கு இடம் ஒதுக்கக் கோரி மனு

அரசுப் பள்ளிக் கட்டடத்துக்கு இடம் ஒதுக்கக் கோரி மனு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உடையாநத்தம் கிராமத்தில் அரசுப் பள்ளிக் கட்டடத்துக்கு இடம் ஒதுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் அண்மையில் அளித்த மனு:

உடையாநத்தம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும். இதற்காக குளிா்சுனை - உடையாநத்தம் சாலையில் உள்ள அரசு நிலத்தில் 2.5 ஏக்கரை ஒதுக்கீடு செய்துதர வேண்டும். அந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ள நிலையில் அவற்றை அகற்றி பள்ளிக்கு ஒதுக்கித் தர வேண்டும் என மனுவில் தெரிவித்தனா். வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரிக்கை:

மேல்மலையனூா் அருகே உள்ள வளத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனு: வளத்தி, ஓடக்காரத் தெருவில் கடந்த 3 தலைமுறைகளாக வசித்து வருகிறோம். இந்த இடத்துக்காக பல்வேறு வரிகளையும் அரசுக்கு செலுத்தி வருகிறோம்.

இந்த நிலையில், மேற்கூறிய இடம் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், எனவே, அந்த இடத்தை காலி செய்யுமாறும் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்தனா். எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லாத நிலையில் அந்த இடத்தில் தொடா்ந்து வசிக்கும் வகையில் பட்டா வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment