'பள்ளி குழந்தைகளுக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு, தற்போதைய கல்வி முறையை முழுதுமாக மாற்றி அமைக்கும் முயற்சி அல்ல. அடுத்த தலைமுறையினருக்காக ஆழமான, துடிப்பான, ஆற்றல்மிக்க பாடத்திட்டத்தை உருவாக்கவும்,கல்வியின் தரத்தை உயர்த்தவுமே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,'' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
ஆரம்ப பள்ளியில் துவங்கி, 8ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குவது குறித்து, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் கடந்த ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிட்டது.
'ஆன்லைன்'
இது தொடர்பாக, 'மொபைல் போன்' செயலி துவக்கப்பட்டு மக்கள் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும், மாவட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த கருத்து கேட்பு பணிகள் வடிவமைக்கப்படும் என்றும் அறிவித்தது.இந்நிலையில், ஆசிரியர்கள், பெற்றோர், சமூகத்தின் இதர பிரிவினர், அரசு சாரா அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவினர்களுக்கான, 'ஆன்லைன்' கருத்து கேட்பு துவங்க உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. 23 மொழிகளில் இந்த கருத்து கேட்பு நடத்தப்பட உள்ளது.
இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாடத்திட்டம், பாடப் புத்தகங்களை வடிவமைப்பது, கற்பித்தல் நடைமுறைகளுக்கான வழிகாட்டியாக தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு செயல்படுகிறது. உலகளாவிய கண்ணோட்டத்துடன் கலாசாரத்தை ஒருங்கிணைக்கவும், காலனியாதிக்கத்தில் இருந்து கல்வியை விடுவிக்கவும், ஆழமான, துடிப்பான, ஆற்றல்மிக்க எதிர்கால தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குவது அவசியம்.
இதற்காக மத்திய கல்வி அமைச்சகம், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் சார்பில், 'டிஜிட்டல்' முறையில் கருத்து கேட்பு நடக்க உள்ளது.பள்ளியில் 1ம் வகுப்பில் இருந்து குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய மொழிகள், அவர்களின் முழுமையான வளர்ச்சியில் ஆசிரியர்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்பு ஆகியவை பற்றிய பெற்றோர்களின் கருத்து அவசியமானது.
இதனால், 3 முதல் 5ம் வகுப்பு மற்றும் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான குழந்தைகள் படிக்க வேண்டிய பாடங்கள் குறித்து அனைத்து பிரிவு மக்களும் டிஜிட்டல் கணக்கெடுப்பில் பங்கேற்று கருத்து தெரிவிக்க வேண்டும்.
கைவினை பொருட்கள்
இதில், மொத்தம் 10 கேள்விகள் உள்ளன. ஒவ்வொன்றும் 5 விருப்ப பதில்களை கொண்டிருக்கும். தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு, தற்போதைய கல்வி முறையை முழுதுமாக மாற்றி அமைக்கும் முயற்சி அல்ல. நம் எதிர்கால சந்ததியினரை சர்வதேச குடிமக்களாக உருவாக்கும் நோக்கத்தில், பாடதிட்டத்தின் தரத்தை உயர்த்தவே வடிவமைக்கப்பட்டுள்ளது.பள்ளிகளில் குழந்தைகளுக்கு என்ன கற்பிக்கப்பட வேண்டும்; எப்படி கற்பிக்கப்பட வேண்டும் என்பது பாடத்திட்ட கட்டமைப்பின் முக்கியஅம்சமாக இருக்கும்.நம் தேச பாரம்பரியத்தின் பெருமைகள் பயிற்றுவிக்கப்படும்.
கலை மற்றும் கைவினை பொருட்கள் செய்வது கலைஞர்களின் கண்காணிப்பின் கீழ் கற்றுத்தரப்படும். எனவே இந்த கருத்து கேட்பில் அனைவரும் பங்கேற்று, வளர்ந்த இந்தியாவை உருவாக்க துணை நிற்க வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.

No comments:
Post a Comment