வங்கி தேர்வு:'தாட்கோ'இலவச பயிற்சி - Daily Dhuniya

Breaking

Saturday, August 20, 2022

வங்கி தேர்வு:'தாட்கோ'இலவச பயிற்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகள், வங்கித் தேர்வில் வெற்றி பெற, 'தாட்கோ' நிறுவனம் அளிக்கும் இலவச பயிற்சி வகுப்பில் சேர, பதிவுகள் வரவேற்கப்படுகின்றன

தாட்கோ நிறுவனம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு, பயிற்சி திட்டங்களை அளித்து வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், வங்கித் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, www.ibps.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இந்தத் தேர்வு வழியாக, 11 பொதுத் துறை வங்கிகளில், 6,932 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில், 20 - 35 வயதுடைய, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்த, அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகளும், வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என, மூன்று முறைகளில் நடக்க உள்ளது.

முதல் நிலைத் தேர்வு அக்., 15, 16, 22 ஆகிய தேதிகளில் நடக்கும். இத்தேர்வில் வெற்றி பெற, தனியார் நிறுவனம் உதவியுடன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, இலவச பயிற்சி அளிக்க, 'தாட்கோ' நிறுவனம் முடிவு செய்துள்ளது.இப்பயிற்சி பெற, www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக்கான கட்டணம், தாட்கோவால் வழங்கப்படும்.

No comments:

Post a Comment