கூட்டுறவு வங்கியில் உள்ள பதவிகளுக்கு நேரடி நியமனம் என்ற செய்தி போலியானது - கூட்டுறவு சங்க பதிவாளர் அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Monday, August 22, 2022

கூட்டுறவு வங்கியில் உள்ள பதவிகளுக்கு நேரடி நியமனம் என்ற செய்தி போலியானது - கூட்டுறவு சங்க பதிவாளர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கியில் உள்ள பதவிகளுக்கு நேரடி நியமனம் என்ற செய்தி போலியானது

கூட்டுறவு சங்க பதிவாளர் அறிவிப்பு

சென்னை, ஆக. 23: கூட்டுறவு வங்கியில் உள்ள பணியிடங்களுக்கு நேரடி நியமனம் என்று வெளியான செய்தி போலியானது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் தலைவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் சார்பில் கடந்த 18ம் தேதி வெளியான அறிவிக்கை போலியானது. இந்த விளம்பரத்தில் தலைமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்றும் இதற்காக விண்ணப்பங் கள் இணையதளம் மூலம் அனுப்பப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட போலி விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.

இது தொடர்பான செய்தி, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரவி வருகிறது. எனவே வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டு வரும் பொய்யான தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இதுபோன்ற பொய் யான தகவல்களை பரப்புவோர் மீது காவல் துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment