ரூ.6 ஆயிரம் உதவித்தொகை திட்டம்
மாணவர்களிடம் தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்க ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தபால்துறை அறிவித்துள்ளது
. -அதன்படி 6 முதல் 9 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். பள்ளி இறுதித் தேர்வில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பள்ளியில் தபால் தலை சேகரிப்பு சங்கத்தில் உறுப்பினர் அல்லது கணக்கு வைத்திருக்க வேண்டும்.இத்திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு செப்.,9ல் மதுரை மண்டல அலுவலகத்தில் தபால் தலை சேகரிப்பு தொடர்பான கட்டுரை போட்டி நடத்தப்படும். இதில் பங்கேற்க www.tamilnadupost.nic.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதனை பூர்த்தி செய்து, 'அஞ்சல் துறை தலைவர், தென்மண்டல அலுவலகம், மதுரை -- 2' என்ற முகவரிக்கு ஜூலை 29 க்குள் அனுப்ப வேண்டும்.இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் தபால் தலை செயல்திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். மேலும் விபரத்திற்கு அஞ்சல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என காரைக்குடி தபால் கண்காணிப்பாளர் ஹூசைன் அகமது தெரிவித்தார்.

No comments:
Post a Comment