CBSE தேர்வு முடிவு
சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் நீடிக்கும் நிலையில், பெரும்பாலான தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வுக்கு மாணவர் விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி நாளாக உள்ளது. மதிப்பெண் இல்லாததால் சி.பி.எஸ்.இ., மாணவர்கள் இன்னும் விண்ணப்பிக்கவில்லை. இந்நிலையில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி 'சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு வெளியான பின் ஐந்து நாட்கள் அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படும்' என்றார். மாணவர்கள், பெற்றோர் குழப்பம்
ஆனால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேர்வது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் பெரும்பாலான தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மாநில பாடத் திட்ட மாணவர்கள் மூலம் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்க்கையை முடித்து விட்டதாக பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.மதுரை பெற்றோர் அருண்சான்றோன் கூறியதாவது: என் மகன் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
பல்வேறு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் விண்ணப்பிக்க பதிவு செய்திருந்தேன். தற்போது அதுகுறித்து கேட்டபோது ஜூலை 8 ல் அரசு ஒதுக்கீடு இடம் சேர்க்கை முடிந்து விட்டது. நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மட்டுமே உள்ளன. அதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்கின்றனர்.சில பாலிடெக்னிக்குகளில் பதிவு செய்து அட்வான்ஸ் ஆக ரூ.5 ஆயிரம் செலுத்தி அரசு ஒதுக்கீடு இடங்களை உறுதி செய்யுங்கள் என்கின்றனர். மனஉளைச்சலில் உள்ளோம். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:
Post a Comment