மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது
மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான தனியாா் துறை வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) நடைபெற உள்ளது.
கோவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடத்தப்படும் இந்த முகாமில் தனியாா் துறை வேலை வாய்ப்பு, சுயதொழில் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும் முகாம் நண்பகல் 1 மணி வரையில் நடைபெற உள்ளது. இதில், தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, நோ்காணல் நடத்தி தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்யும்.
இம்முகாமில் 18 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் கலந்துகொள்ளலாம். குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
இதில் கலந்துகொள்ள விரும்பும் மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் தங்களின் விவரங்களை 89255-13701, 89255- 13717, 89258-01463, 90807-50139 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

No comments:
Post a Comment