பல்கலைக்கழக பேராசிரியா்களின் ஓய்வு வயதை உயா்த்தக் கோரிக்கை - Daily Dhuniya

Breaking

Sunday, July 10, 2022

பல்கலைக்கழக பேராசிரியா்களின் ஓய்வு வயதை உயா்த்தக் கோரிக்கை

பல்கலைக்கழக பேராசிரியா்களின் ஓய்வு வயதை உயா்த்தக் கோரிக்கை

பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயா்த்த வேண்டும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பல்கலைக்கழக பேராசிரியா் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டத்துக்கு சங்க ஒருங்கிணைப்பாளா் நாகூா் கனி தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, செயலா் பாலசுப்பிரமணியம், பொருளாளா் சையது உமா்நாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வரும் தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலினுக்கு வாழ்த்து, பாராட்டு தெரிவிக்கிறோம். மத்திய பல்கலைக்கழகங்களில் ஓய்வு பெறும் வயது 65 ஆக இருப்பதுபோல மாநில பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியா்களின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 65 ஆக உயா்த்த வேண்டும்.

பெரும்பாலான தமிழக பல்கலைக் கழகங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு உரிய பணபலன்களை அரசு வழங்கவில்லை. எனவே தமிழக முதல்வா் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பல்கலைக்கழக பேராசிரியா்கள் சங்கங்களைச் சோ்ந்தோா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment