இந்து சமய அறநிலையத்துறையில் தற்காலிக பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Daily Dhuniya

Breaking

Tuesday, July 5, 2022

இந்து சமய அறநிலையத்துறையில் தற்காலிக பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

tnhrce recruitment 2022 : இதர விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து கேட்டுத் தெரிந்து பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் திருக்கோயில் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகை வட்டம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கான நிர்வாக பயிற்சி மையத்திற்கான முதல்வர் மற்றும் இளநிலை உதவியாளர் / கணினி இயக்குபவராக மாத தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து 01.08.2022 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதர விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து கேட்டுத் தெரிந்து பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் திருக்கோயில் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உதவியாளர் / கணினி இயக்குபவர் -

18 வயதிற்கு மேல் 35 வயதிற்குள் -

10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அரசு / அரசால் அங்கீகரிக்கப் பட்ட நிறுவனத்தில் வழங்கப்பட்ட கணினி அறிவியலில் பட்டய படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மற்றும் தமிழ் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்

முதல்வர் பணியிடம் - 35 வயதிற்கு மேல் 60 வயதிற்குள் - முதுகலை ஆசிரியராக 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment