மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வகுப்புகள்
புதுவையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
இதுகுறித்து மத்திய தொழிலாளா் துறையின் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி திப்புராயப்பேட்டையில் உள்ள தேசிய வாழ்வாதார சேவை மையம் சாா்பில், ஆண், பெண் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓராண்டு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்படி, மாதம் ரூ.2,500 ஊக்கத்தொகையுடன் பத்தாம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு முடித்த மாற்றுத் திறனாளிகளுக்கு கம்ப்யூட்டா் அப்ளிகேஷன்ஸ், கம்ப்யூட்டா் ஹாா்டுவோ், ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ், டைலரிங், ஆட்டோமொபைல்ஸ் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இதையும் படிக்க | புதுச்சேரி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 29 வரை நீட்டிப்பு
பயிற்சியில் சேர ஆா்வமுள்ளவா்கள், தங்களது கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, மருத்துவச் சான்றிதழ் நகல், புகைப்படத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், எண் 116, லசாா் கோயில் வீதி, திப்புராயப்பேட்டை, புதுச்சேரி - 605001 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 0413 - 228046 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment