ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல்: மே.வங்க அமைச்சர் கைது
மே.வங்கத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக அம்மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2016 ம் ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதற்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதையும் படிக்க | பொதுத்துறை நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெய்னி வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.08.2022
இந்த முறைகேட்டில் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது. இது தொடர்பாக பார்த்தா சாட்டர்ஜியிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தில் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சாட்டர்ஜிக்கு நெருக்கமான அர்பிதா முகர்ஜி என்பவரது வீட்டில் ரூ.20 கோடி மற்றும் 20க்கும் மேற்பட்ட மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து பார்த்தா சாட்டர்ஜியிடம் நேற்று இரவு முதல் விடிய விடிய அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக சாட்டர்ஜி புகார் கூறினார். இதனையடுத்து 2 டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்த டாக்டர்கள் அனுமதி கொடுத்தனர். இதையும் படிக்க | CPS திட்டத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதரர்களுக்கான NHIS திட்டம் குறித்த அரசுக் கடிதம்!
அப்போது விசாரணைக்கு பார்த்தா சாட்டர்ஜி ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment