12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - Daily Dhuniya

Breaking

Tuesday, July 19, 2022

12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் dge.tn.gov.in இணையதளத்தில் நாளை பிற்பகல் முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் வரும் 25-ம் தேதி +2 துணைத்தேர்வு தொடங்கும் நிலையில், தேர்வுத்துறை அறிவிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6

மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு, ஜூலை/ஆகஸ்ட் 2022

தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் தொடர்பான

செய்திக் குறிப்பு

நடைபெறவுள்ள ஜூலை 7 ஆகஸ்ட் 2022, மேல்நிலை இரண்டாமாண்டு துணைத்தேர்வெழுத, விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 20.07.2022 பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் “HALL TICKET” என்ற வாசகத்தினை 'Click' செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள “HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM, JULY / AUGUST 2022 HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தினை 'Click' செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்தர பதிவெண் (Permanent Register No.) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஜூலை / ஆகஸ்ட் 2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையினை (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற

இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment