இலவச ஐஏஎஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - Daily Dhuniya

Breaking

Sunday, June 19, 2022

இலவச ஐஏஎஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

பெங்களூரில் அளிக்கப்படும் இலவச ஐஏஎஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கா்நாடக ஆா்ய வைஸ்ய மகாசபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக ஆா்ய வைஸ்ய மகாசபா சாா்பில் பெங்களூரில் நேரடியாக இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்), கா்நாடக ஆட்சிப்பணி (கே.ஏ.எஸ்.) தோ்வுக்கான பயிற்சியை இரண்டரை ஆண்டுகாலமாக இலவசமாக வழங்கி வருகிறது. அடுத்த பயிற்சி வகுப்புகள் ஜூலை 1-ஆம் தேதிமுதல் தொடங்கவிருக்கின்றன. பெங்களூரில் தங்கிப்படிக்க விடுதி வசதியும் உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், தகுதியான மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இதில் இணைந்து பயிற்சி பெற விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை இணையதளம் அல்லது 8073499217 என்ற செல்லிடப்பேசியில் வாட்ஸ் ஆப் வழியாக ஜூன் 30-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். கூடுதல் விவரங்களுக்கு கா்நாடக ஆா்ய வைஸ்ய மகாசபா, 16, சேஷாத்ரி சாலை, காந்திநகா், பெங்களூரு-9 என்ற முகவரி அல்லது 080-22206151, 9663900439 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment