வரும் ஜூன் 30ம் தேதிக்கு பிறகு மாத சம்பளதாரர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லும் சம்பளம், பி.எஃப் மற்றும் வேலை நேரம், மூலவரி பிடித்தம் உள்ளிட்டவை மாறப் போகிறது. என்னென்ன மாற்றங்கள் நிகழ உள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
1. நிகர சம்பளம், பி.எஃப் கணக்கில் பிடித்தம் செய்யப்படும் தொகை, வேலை நேரம் உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சம்பள குறியீடு உள்ளிட்டவை அடங்கிய புதிய தொழிலாளர் சட்டத்தை மத்திய அரசு ஜூலை 1 முதல் அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. புதிய சம்பள குறியீட்டின்படி, நிறுவனங்களில் வேலை நேரம், பி.எப் தொகை அதிகரிக்கப்படும். தொழிலாளர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லும் சம்பளம் குறையும்.
2.மத்திய அரசு ஜூலை 1 முதல் புதிய தொழிலாளர் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது. சில மாநிலங்கள் மட்டும், விதிகளின் கீழ் இன்னமும் தொழிலாளர் குறியீடுகளை முடிவு செய்யவில்லை. 3 மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்கள் புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளதாக லோக்சபாவில் மத்திய அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார். 3. அடுத்த மாதம், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும். ஆண்டுக்கு இருமுறை அதாவது, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு இருக்கும். சில்லறை பணவீக்கம் அதிகரிப்பிற்கு ஏற்ப, அகவிலைப்படி தொகையை அதிகரித்து, மத்திய அரசு வழங்கும்.
4. ஜூலை 1 முதல், சமூக வலைதளங்களில் வணிக நோக்கில் விற்பனையை அதிகரிக்க செய்யும் விளம்பரம் வாயிலாக வருமானம் பெறுவோர், மருத்துவர்களுக்கு மூலவரி பிடித்தம் (டி.டி.எஸ்) செய்யப்படும். புதிய வரி பிடித்தம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
5. ஜூன் 30ம் தேதியில் இருந்து டெபிட், கிரெடிட் கார்டு பயனர்களின் தகவல்களை வணிக நிறுவனங்கள் சேகரித்து வைப்பதை தடுக்கும் டோக்கனைசேஷன் நடைமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று, இதற்கான அவகாசத்தை செப்.30 வரை 3 மாதம், ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. 6. நாட்டில் உள்ள அனைத்து வங்கி அல்லாத ப்ரீபெய்டு பேமெண்ட் கருவி (பிபிஐ) வழங்குபவர்களுக்கும், கிரெடிட் லைன்களைப் பயன்படுத்தி ப்ரீபெய்டு கார்டுகள் உட்பட எந்தவொரு தகவல்களை ஏற்ற கூடாதென தடை விதித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
7. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், நாடு முழுவதும் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. கடைசி மாநிலமாக அசாமில் செயல்பாட்டு வந்துள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013ன் கீழ், பயனாளர்கள், நாடு முழுதும் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும், பயோமெட்ரிக் முறையில் பதிந்து, மானிய விலையில் உணவு பொருட்களை பெற்று கொள்ளலாம்.
8. மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராம திட்டம், கடந்த 2016 நவம்பரில் கிராமப்புறங்களில் ஏழை மக்களுக்கு, 2.7 கோடி வீடுகள் கட்டி தர இலக்கு நிர்ணயித்து துவங்கப்பட்டது. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சக கணக்கின்படி, தற்போது வரை 1.8 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதாவது, இலக்கில் 67.72 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment