கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் - பத்திரிக்கை செய்தி - Daily Dhuniya

Breaking

Monday, May 23, 2022

கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் - பத்திரிக்கை செய்தி

கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தருமபுரி

பத்திரிக்கை செய்தி

தேதி: 10.05.2022

தருமபுரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமும், அகில இந்திய வானொலியின் தருமபுரி பண்பலை நிலையமும் இணைந்து வரும் 31.05.2022 முதல் 23.08.2022 வரை. வார காலத்திற்கு, ஒவ்வொரு 13 செவ்வாய்க்கிழமையும் இரவு 7.25 மணிக்கு தருமபுரி பண்பலை வானொலியின் வயல்வெளி நிகழ்ச்சியில் "இலாபகரமான கறவைமாடு வளர்ப்பு" என்ற தலைப்பில் வானொலி வேளாண்மை பள்ளிப்பாடம் நடத்தப்பட உள்ளது. இந்த தொடர் ஒலிபரப்பில் கறவைமாடுகளைத் தேர்வு செய்தல், பராமரித்தல், சமச்சீர் தீவனம் தயாரித்தல், வறட்சியை எதிர்கொள்ளும் வழிமுறைகள், நோய் மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை, கன்று பராமரிப்பு, மரபுசார் மூலிகை மருத்துவம், முதலுதவி, சுகாதாரமான பால் உற்பத்தி, பால் பொருட்களை மதிப்பு கூட்டுதல், கறவை மாடு வளர்ப்பில் ஆதாயம் மேம்பட பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக வல்லுனர்களால் வானொலி பாடங்கள் நடத்தப்பட உள்ளது.

வானொலி வேளாண் பள்ளிப்பாடத்தில் பதிவு செய்து, பயன்பெற விரும்புவோர் பதிவுக் கட்டணமாக ரூபாய். 100 குண்டலபட்டியிலுள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செலுத்த வேண்டும். பயிற்சிக்கான முன்பதிவு இம்மாத இறுதி (31.05.2022) வரை நடைபெறும். வானொலியில் நடத்தப்படும் வேளாண் பள்ளிப்பாடங்கள் முடிந்தவுடன், கட்டணம் செலுத்தி பதிவு செய்த விவசாயிகளுக்கு ஒருநாள் நேர்முக பயிற்சியும், பாடங்கள் அடங்கிய புத்தகமும், சான்றிதழும் வழங்கப்படும்.

பதிவு குறித்த தகவல்களைப் பெறவோ அல்லது மேலும் விபரங்களுக்கு 04342 288420 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment