மாணவர்கள் 'பிட்' விவகாரம்; 5 கண்காணிப்பாளர்கள் நீக்கம் - Daily Dhuniya

Breaking

Friday, May 20, 2022

மாணவர்கள் 'பிட்' விவகாரம்; 5 கண்காணிப்பாளர்கள் நீக்கம்

5 கண்காணிப்பாளர்கள் நீக்கம்

கொல்லிமலையில் பிளஸ் 2 தேர்வு விடைகள் அடங்கிய, 'பிட் பேப்பர்' குவியல் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில், தேர்வு மையத்தில் பணியாற்றிய ஐந்து கண்காணிப்பாளர்கள், தேர்வுப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.நாமக்கல் மாவட்ட பொதுத் தேர்வு பொறுப்பாளராக, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் பொன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மே 17ல், கொல்லிமலை, வாழவந்தி நாடு ஜி.டி.ஆர்., அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அப்பகுதியில் உள்ள டீக்கடையில், மாணவர்கள் பிட் அடிக்க வசதியாக, 'ஜெராக்ஸ்' மூலம் நகல் எடுத்த விடைகள் அடங்கிய பேப்பர்கள் குவியலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை இணை இயக்குனர் பறிமுதல் செய்தார்.ஜெராக்ஸ் பிட் பேப்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொல்லிமலை பள்ளியில், அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ஐந்து பேரை, மாவட்ட கல்வி அலுவலர் ராமன், தேர்வு பணியில் இருந்து நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.அவர்களுக்கு பதில், புதிதாக ஐந்து அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment