'தேர்தலில் பாடம் புகட்டுவோம்'
'பழைய ஓய்வூதிய அமலாக்கம் தொடர்பாக நிதியமைச்சர் தியாகராஜன் கூறியது முதலாளித்துவ நடவடிக்கை. 2004 தேர்தலில் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டியதை நினைவூட்டுகிறோம்' என வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சங்க மாநில பொதுச் செயலாளர் முருகையன், தலைவர் குமரேசன் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க இயலாது என அமைச்சர் தியாகராஜன் கூறியிருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை ஆண்டாண்டு காலமாக வழங்கி வருகிறது. ஆனால் நிதிநிலையை காட்டி சமூகநீதி அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின்
1972ல் முதல்வர் கருணாநிதியால் வழங்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் தற்போது காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வேதனையின் உச்சம்.2003ல் ஜெயலலிதா நிறுத்தியபோது அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தது, 2004 தேர்தலில் அவருக்கு தகுந்த பாடம் புகட்டியதை அரசுக்கு நினைவூட்டுகிறோம்.
அரசு ஊழியர்களுக்கு எதிராக அமைச்சர் கூறியது முதலாளித்துவ நடவடிக்கை. அரசின் நிலைப்பாட்டை முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்

No comments:
Post a Comment