சுற்றுச்சூழல் விருதுக்கு மே 23 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - Daily Dhuniya

Breaking

Saturday, May 21, 2022

சுற்றுச்சூழல் விருதுக்கு மே 23 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சுற்றுச்சூழல் விருது

தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரை ஆகிய பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் தனி நபா்கள், தன்னாா்வ நிறுவனங்கள், வல்லுநா்கள், கல்வியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தோ்ந்தெடுத்து ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்படுகின்றன. மே 23 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

இதன்படி, 2021-ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுக்குரிய விண்ணப்பப் படிவங்களை, இயக்குநா், சுற்றுச்சூழல் துறை, தரைத் தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-15 என்ற முகவரியிலிருந்து மே 20-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பித்தை www.environment.tn. gov.in என்ற வலைதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேற்குறிப்பிட்ட முகவரிக்கு மே 23 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment