மாவட்டத் தொழில் மையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - Daily Dhuniya

Breaking

Monday, April 4, 2022

மாவட்டத் தொழில் மையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி, மார்ச் 31: கள்ளக்குறிச்சி மாவட்டத் தொழில் மையத் தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்துக்குத் தகுதியானோர் ஏப்ரல் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத் தொழில் மையத்தில் காலியாகவுள்ள ஓட்டுநர் பணி பொதுப் போட்டியாக ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இலகுரக மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கான உரிமம் பெற்றவராகவும், ஊர்தி ஓட்டுவதில் ஓராண்டு முன்னனுபவமும், வாகனத்தை பழுது பார்க்கும் அடிப்படைத் திறனும் பெற்றிருப்பவ ராகவும் இருத்தல் வேண்டும். 1.7.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட் சமாக 32 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34 வயதுக்குள்ளும், பட்டிய லினத்தவர், பழங்குடியினராக இருப்பின் 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சிராஜா நகர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி எதிரில் எண் 95-2எ-2 -இல் உள்ள மாவட்டத் தொழில் மைய அலு வலகத்தில் தங்கள் விண்ணப்பம், உரிய நகல் சான்றிதழ்களுடன் ஏப் ரல் 11-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment