ஆராய்ச்சி உதவித்தொகைக்கான காலஅவகாசம் ஓராண்டு நீட்டிப்பு - பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Monday, April 4, 2022

ஆராய்ச்சி உதவித்தொகைக்கான காலஅவகாசம் ஓராண்டு நீட்டிப்பு - பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு

கரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, தேசிய அளவிலான ஆராய்ச்சி உதவித்தொகைகளுக் கான (பெல்லோஷிப்) செல்லத் + தக்க காலஅளவு ஓராண்டு நீட்டிக் கப்படுவதாக யுஜிசி அறிவித் துள்ளது.

இது தொடர்பாக பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) செய லர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட் டுள்ள பொது அறிவிப்பில் கூறப் பட்டிருப்பதாவது: கரோனா பெருந் தொற்று காரணமாக, நாடு முழுவ தும் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் எம். ஃபில், பிஎச்.டி. சேர்க்கையில் காலதாமதம் ஏற்பட்டது. இதைக் கருத்தில்கொண்டும், சேர்க்கை யில் ஏற்பட்டுள்ள சிரமங்களை எதிர்கொள்ளும் வகையிலும் யுஜிசி நெட் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ ஷிப் (ஜெஆர்எஃப்), எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கான தேசிய பெல்லோஷிப், இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான தேசிய பெல்லோஷிப், சிறுபான்மையின ருக்கான மவுலான ஆஸாத் நேஷ னல் பெல்லோஷிப் ஆகியவற்றிந் செல்லத்தக்க காலஅளவு (validity period) மேலும் ஓராண்டு நீட்டிக் கப்படுகிறது. இதர விதிமுறை களில் எவ்வித மாற்றமும் இல்லை. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment